search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுல்டர் நைல்"

    சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகபந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

    8.3 ஓவரில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ஆர்கி ஷார்ட்டை 33 ரன்னிலம், மேக்ஸ்வெல்லை 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட்டை டக்அவுட்டிலும் குருணால் பாண்டியா வெளியேற்றினார்.

    இதனால் 90 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஆஸ்திரேலியா. இறுதியில் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.



    இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 25 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் 7 பந்தில் 13 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா 38 ரன்களும், புவி 33 ரன்களும், கலீல் அகமது 35 ரன்களும் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
    கட்டாயம் புல் மற்றும் குக் ஷாட் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் சர்மாவை உட்படுத்துவோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா 2018-ல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் நினைக்கிறார்கள்.

    பொதுவாக ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், வேகம் இருக்கும். ரோகித் சர்மா எந்தவொரு ஆடுகளத்திலும் ஷாட்டாக பந்தை வீசினால் புல் ஷாட் அல்லது குக் ஷாட் அடித்துவிடுவார். அப்படிபட்டவருக்கு ஆஸ்திரேலியா ஆடுகளம் சிறப்பாக இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவை வலுக்கட்டாயமாக புல், குக் ஷாட் அடிக்க அவரது ஆசையை தூண்டுவோம் என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நைல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ரோகித் சர்மா நம்ப வியக்கத்தக்க வீரர். உலகின் எல்லா இடங்களிலும் சிறந்த சாதனையை படைத்துள்ளார். ஆகவே, கவனிக்கப்பட வேண்டிய வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மா. ஆனால், நாங்கள் புதிய பந்தில் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவிற்கு எதிராக கடைசியாக விளையாடும்போது வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரென்டோர்ப் ரோகித் சர்மாவை வீழ்த்தியிருக்கிறார். அப்போது பந்தை ரோகித் சர்மாவின் கால் பேடு (Pad) அருகில் பிட்ச் செ்யதார். ஆகவே, நாங்கள் அதேபாணியில் குறிவைத்து மீண்டும் ரோகித் சர்மாவை தாக்குவோம்.

    ஆஸ்திரேலியாவில் பவுண்டரி லைன் மிகப்பெரியது. ஆகவே, வலுக்கட்டாயமாக ரோகித் சர்மாவை புல் ஷாட், குக் ஷாட் அடிக்க  அவரது ஆசையை தூண்டும் வகையில் பந்து வீச முயற்சி செய்வோம். ஜேசன் பெரென்டோர்ப் சிறந்த தொடக்க நிலை பந்து வீச்சாளர் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அவர் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வார்.

    இன்று சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதே சூழ்நிலை 21-ந்தேதி நிலவும் என்று நம்புகிறோம். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்’’ என்றார்.
    ×